பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8:0

தெய்வங்கள்

(3)

ஆதிபரஞ் சோதி, அழகுமுத்து மாரி, ஆவாரங் காட்டிலே தாவாரங் கட்டப்போயி தாவாரம் பத்தாமல் தவிக்கிருளாம் மாரியாத்தா; ஆலாஞ் செறுவில் ஆனேவந்து மேயுதுன்னு ஆன விலைமதிக்கப் புறப்பட்டாளாம் மாரியாத்தா; பூலாஞ் செறுவிலே புலிவந்து மேயுதுன்னு புலியை விலைமதிக்கப் புறப்பட்டாளாம் மாரியாத்தா, அல்லித் துறையிலே புல்லுச் செதுக்கப்போய் அழகான மூக்குத்தியை வெச்சு மறந்தாளாம்; பாத்தவங்க குடுத்திடுங்க; பழனிச்சீமை மூக்குத்தி: கண்டவங்க குடுத்திடுங்க, கண்டிச்சீமை மூக்குத்தி, பாத்தவங்க குடுத்துடுங்க; பசுவை வித்துப்

பணந்தாரேன்: கண்டவங்க குடுத்துடுங்க; பன்னிகுத்திப்

பனந்தாரேன்.

(4) உச்சி மலைமேலே ஊமத்தம் பூப்போலே பச்சைக் கிளிபோலே பறக்கிருளாம் மார்யாத்தா: ஆதிபரஞ் சோதி, அழகு முத்து மாரி, கண்ண னுாரு மேடையிலே பள்ளிகொண்ட தாயி. எல்லாரும் போறவழி கல்லும் கறடும்; மாரியாத்தா போறவழி தேரும் திருங்ாளும். ஒடையை வெட்டி ஒதுங்கவிட்டு ஒடற தண்ணியிலே அனேபோட்டுச் சட்டம் செலுத்தியே மகமாயி சவாரி வாறதைப் பாருங்கடி. ஒண்ணும் கரகமடி, எங்ககண்ண னுாராளுக்கு: ஏகாந்த மாரி, ஆங்காரரூபி, - அசைஞ்சாடும் பொன்கரகம், நம்பபரஞ் சோதி, ரெண்டாங் கரகமடி எங்ககண்ண அாராளுக்கு. (இப்படியே பத்துவரையில் வரும்.) -