பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அரசு கண்ட இளவரசன்

8

மறைத்து வைக்க முடியும். அன்று மாமன்னரின் தம்பி கேட்காமல் விட்டு விட்டால், பிறகு, வேறொரு நாள் யாராவது ஒருவர் கேட்காமலா விட்டுவிடப் போகிறார்கள். அணைக்கடங்காத வெள்ளம் என்றாவது ஒரு நாள் உடைப்பெடுத்துக் கொள்ளத்தானே செய்யும்?

அப்படி மாமன்னர் கவலைக்குள்ளாகும்படி அவர் தம்பி கேட்ட கேள்வி என்ன என்று அறிய ஆவல் பிறப்பது இயற்கை தானே| தம்பி கேட்ட கேள்வி இதுதான்.

"அண்ணா , சித்தார்த்தன் பெரியவனாகி விட்டான். திருமணமும் ஆகிவிட்டது. இன்னும் சின்னப் பிள்ளை போல் இருந்தால் என்னாவது? என்றும் அந்தப்புரமே கதியென்று கிடந்தால், சாக்கிய குலத்தின் வீரமெல்லாம் மங்கிப் போகாதா? நான் துணிந்து சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். வீரனாக வளர வேண்டிய பிள்ளையை நீங்கள் அளவுக்கு மிஞ்சிச் செல்லம் கொடுத்து ஆகாவரியாக்கிக் கொண்டு வருகிறீர்கள் !"

மூச்சு விடாமல் தம்பி கேட்ட கேள்வி சுத்தோதன மாமன்னரின் செவிவழியே புகுந்து