பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

சிந்தையைக் கலக்கியது. அவர் பதில் ஏதும் பேசவில்லை

சுத்தோதனரின் மனத்திரையில் பழைய நிகழ்ச்சிகள் எல்லாம் சித்திரப்படங்கள் போல் வரிசையாகக் காட்சியளிக்கத் தொடங்கின.

இரண்டு மனைவியர் இருந்தும் தனக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லையே என்று சுத்தோதனர் கவலையோடிருந்த காலம் அது. ஒருநாள் மாயா தேவி அவரிடம் வந்து, தான் கண்ட கனவைப் பற்றிக் கூறியபோது அவர் எவ்வளவு உணர்ச்சி யடைந்தார்.

மாயாதேவியைச் சுற்றிலும் மக்கள் கூடி நின்றார்களாம். அவளைப் பார்த்து எல்லோரும் பயபக்தியோடு கையெடுத்துக் கும்பிட்டார்களாம். கடவுளைக் கண்டு விட்டதுபோல் அந்த மக்கள் முகங்களிலே ஆனந்தக்களை கூத்தாடியதாம்.

இப்படி ஒரு கனவு மாயாதேவி கண்டிருக்கிறாள். இந்தக் கனவுக்கு ஏதோ பொருள் இருக்க வேண்டும் என்று தோன்றியது சுத்தோதனருக்கு.