பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அரசு கண்ட இளவரசன்

12

சுத்தோதனர் பிறகு இந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டாலும், மீண்டும் நினைத்துக் கொள்ளும்படியான நேரங்கள் எத்தனை முறை வந்து விட்டன. ஒவ்வொரு முறையும் அவர் அடைந்த மனத் துயரத்திற்கு அளவுண்டா?

சரியாக ஓராண்டுக்குப் பிறகு நிறைந்த வயிற்றோடு மாயாதேவி தன் தாய்வீட்டுக்குப் புறப்பட்டாள். அப்போது எவ்வளவு மகிழ்ச்சியோடு சுத்தோதனர் அவளைப் பல்லக்கில் ஏற்றி அனுப்பிவைத்தார்! ஆனால் போகும் வழியிலேயே, லும்பினி என்ற காட்டின் நடுவே மாயா தேவி பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இந்தச் செய்தியை அறிந்ததும் சுத்தோதனர் ஆவலோடு காட்டிற்கு விரைந்து சென்றார். தாயையும் பிள்ளையையும் அரண்மனைக்கு அழைத்து வந்தார். என்ன அழகாக இருந்தது அந்தப் பிள்ளை, எத்தகைய கவர்ச்சி யிருந்தது அந்தப் பிள்ளையின் முகத்திலே. தன் பிள்ளை என்பதையும் மறந்து சுத்தோதனருடைய கைகள் தாமாகக் குவிந்து அந்தப் பிள்ளையை வணங்கினவே, அதன் பொருள் என்ன?

பிள்ளை பிறந்த ஏழாவது நாள் எதிர்பாராத விதமாக மாயாதேவி இறந்து போனாள். அப்-