பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

போது தான் சுத்தோதனருக்கு அந்தக் கிழவருடைய மொழிகள் நினைவுக்கு வந்தன.

அவன் கானக வாழ்வை நாடிச் செல்லவும் கூடும் என்றாரே அந்தப் பெரியவர். தன் பிள்ளை கானக வாழ்வுக்காகப் பிறந்தவன் என்பதற்காகத் தானோ காட்டில் பிறந்தான்? அவன் பந்த பாசமற்றவன் என்பதற்காகத் தானோ பிறந்தவுடன் தாயை இழந்தான்.

இப்படியெல்லாம் நினைக்க நினைக்க சுத்தோதனருடைய தலை சுழன்றது.

தன் குல விளக்காகத் திகழ வேண்டிய பிள்ளை கானகந் தேடிப் போய்விட்டால், தன் முன்னோரும் தானும் தேடி நிலை நிறுத்திய பேரரசு என்னாவது? தங்கள் குலமும் புகழும் என்னாவது? எல்லாம் மண்ணோடு மண்ணாக வேண்டியதுதானா?

முடியாது. முடியவே முடியாது!

தன் பிள்ளை அரசனாகத்தான் வாழ வேண்டும். விதி எப்படி இருந்தாலும் சரி அதை வென்று தான் ஆக வேண்டும். இனி