பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அரசு கண்ட இளவரசன்

14

ஒவ்வொரு கணமும் என் மகனின் வாழ்க்கைப் பாதையைச் சரி செய்வதில்தான் என் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவன் ஒரு மாவீரனாகத் திகழ்வதைப் பார்த்துவிட்டுத்தான் நான் சாக வேண்டும். இப்படி உறுதி செய்து கொண்டார் சுத்தோதனர்.

“பிரஜாவதி! பிரஜாவதி!” என்று கூவி அழைத்தார் மாமன்னர். அவருடைய மற்றொரு மனைவி விரைந்து வந்து பயபக்தியோடு தலை வணங்கி எதிரில் நின்றாள்.

“இதோ பார்! பிரஜாவதி! இனி இந்தப் பிள்ளை உன் பிள்ளை! நீ அவனுக்கு மாற்றாந் தாயல்ல! நீ தான் அவனைப் பெற்ற தாய்! தெரிகிறதா?'

“நான் பெற்ற பேறு, மன்னர் பிரானே!" என்று பணிவன்புடன் கூறினாள் பிரஜாவதி. அன்று கொடுத்த வாக்குறுதியை அவள் கடைசிவரை மீறவேயில்லை. சித்தார்த்தனை அவள் எத்தனை செல்லமாக வளர்த்தாள்! பெற்ற தாயே அவள் தானென்று நினைத்துக் கொள்ளும்படியல்லவா அவனைப் பேணி வளர்த்தாள். கொண்டவன் குறிப்பறிந்து நடப்பது