பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

பெண்டிர்க்கழகு என்பார்கள். சுத்தோதனர் எப்படி நினைத்தாரோ அப்படி யெல்லாம் சித்தார்த்தனை அவள் வளர்த்தாள்.

சுத்தோதனர் ஒருநாள் பிரஜாவதியைத் தனியே அழைத்தார். “பிரஜாவதி! உன்னிடம் ஒன்று சொல்லப் போகிறேன். கவனமாகக் கேள்! சித்தார்த்தனுக்கு ஒரு கவலைகூட வரக் கூடாது. அவன் எதைக் கேட்டாலும் அதைக் கொடுத்துவிட வேண்டும். என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்துவிட வேண்டும். முடிந்தால் அவன் என்ன நினைக்கிறான் என்று தெரிந்துகூட அதைச் செய்துவிட வேண்டும். அவன் சிறிது கவலைப்பட்டாலும் நான் பெருந் துயரப்படுவேன். அவன் அழுகுரல் என் காதில்பட்டால் என் உயிர் உருகி விடும்!”

“மன்னர் பிரானே, நீங்கள் கவலைப்படவே வேண்டாம். நம்முடைய சக்திக்கியன்றவரை சித்தார்த்தனுக்கு ஒரு கவலையும் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொன்னாள் பிரஜாவதி.

சுத்தோதனர் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காக மட்டும் அவள்