பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அரசு கண்ட இனவரசன்

16

அப்படிச் சொல்லவில்லை. உண்மையாகவே தான் கூறினாள். கூறியபடியே நடந்து கொண்டாள்.

சித்தார்த்தன் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான். செல்லமென்றால் செல்லம் அப்படிப்பட்ட செல்லம். மாயாவதி இருந்திருந்தால் கூட அப்படிச் செல்லமாக வளர்த்திருக்க மாட்டாள். அவன் வேண்டுமென்று கேட்ட பொருள் கிடைக்கும். அது மட்டுமல்ல, அவன் ஒரு பொருளை விரும்பிப் பார்த்தாலே அது அவனுக்குத் தரப்படும்.

அவன் கண் எதிரில் எந்தவிதமான கோரக் காட்சியும் நிகழக் கூடாது என்பது மாமன்னர் கட்டளை. அரண்மனைக்குள் யாரும் சண்டை யிட்டுக் கொள்ளவோ சச்சரவிட்டுக் கொள்ளவோ கூடாது. மீறி நடந்தால் கடுந் தண்டனை. தாதிமார்கள் சித்தார்த்தனுக்கு பயங்கரமான விளையாட்டு எதையும் காட்டக் கூடாது. பேய்பூதக் கதைகள் பூச்சாண்டி பயமுறுத்தல்கள் எதுவும் அவனெதிரில் பேசக் கூடாது. இப்படிப்பட்ட கட்டுத்திட்டங்களெல்லாம் அரண்மனைப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டன.