பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

20

யிலே உள்ள நிலங்களுக்குத் தண்ணீரில்லாமல் போயிற்று

குடிமக்கள் அரண்மனையிலே வந்து முறையிட்டார்கள். அரசர் கட்டளைப்படி பல ஏவலாளர்கள் மரத்தை அப்புறப்படுத்துவதற்காகச் சென்றார்கள். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மரத்தை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தி சித்தார்த்தன் செவியில் விழுந்தது. அரண்மனையிலிருந்து அவன் ஆற்றங்கரைக்கு ஓடோடி வந்தான். துணிச்சல் உள்ள இளைஞர்கள் சூழச் சென்று, அவர்கள் துணையோடு மரத்தைத் திருப்பி எளிதாகக் கரைக்கு இழுத்து வந்துவிட்டான்.

பலர் கூடி முயன்றும் முடியாத அரிய செயலை மிக எளிதாகச் செய்து முடித்த சித்தார்த்தனின் திறமையையும் கூரிய மதி நுட்பத்தையும் கண்டு நாடே அதிசயித்தது. குடிமக்களைக் காப்பாற்றும் ஒரு கோமகனைத் தான் நான் பெற்றிருக்கிறேன் என்று சுத்தோதனர் உள்ளம் தனக்குள்ளே பேசிக் கொண்டது.

இன்னுமொரு நிகழ்ச்சி சுத்தோதனருடைய மனத்திரையிலே படம் விரித்தது.