பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

ஐயம் இல்லை. தன்னுடைய ஏற்பாட்டின் பேரில் தான் அவன் அந்தப்புரமே கதியென்று கிடக்கிறான் என்ற உண்மையையும் அவர் மறந்து விடவில்லை.

ஆகவே, அவர் தன் தம்பியையும், கூடி யிருந்த உறவினர்களையும் நோக்கி, “சித்தார்த்தன் நீங்கள் நினைப்பது போல் கோழையல்ல; திறமையற்றவனுமல்ல. காலம் வரும்போது அவனுடைய ஆற்றலைக் காண்பீர்கள் என்று உறுதி மிகுந்த குரலில் கூறினார்.

அவர் எவ்வளவு உறுதியான முறையில் கூறிய போதிலும் கூடியிருந்த உறவினர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை.

இந்தப் பேச்சு, இளவரசன் வீரமற்றவனாக விளங்கினான் என்ற பேச்சு அந்த விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு எங்கும் பரவியது. நகரின் முக்கிய மன்றங்களிலும், அரண்மனை அலுவலகங்களிலும், அந்தப்புர வேலைக்காரர்கள் கூடும்போதும், பொழுது போக்குத்துணையாக இந்தப் பேச்சுப் பயன்பட்டது.

“இளவரசன் இப்படி யிருந்தால் நம் நாடு