பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

வெல்லுபவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும் என அறிவித்தார்கள். வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ளவும், போட்டியைக் காணவும் களத்தில் வந்து கூடினார்கள். வேடிக்கை பார்க்கப் பொதுமக்கள் திரண்டு வந்தார்கள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களும், பெருநிலக் கிழார்களும், வீரர்களும் சூரர்களும் போட்டியிலே கலந்து கொண்டார்கள்.

வில்லெய்வதிலே இளவரசனை வென்று வாகை சூட வந்த வீரர்கள் பலர். சிலம்ப வித்தையிலே சித்தார்த்தனைத் தோற்கடிக்க எண்ணிவந்த தீரர்கள் பலர். வாள் வீச்சிலே தோள் வலியைக் காட்டிப் பரிசுப் பொருளைத் தூக்கிக் கொண்டுபோக ஊக்கமுடன் வந்தவர்கள் பலர், மற்போரிலே மலர் வாகை சூட. வந்த மல்லர் பலர். இப்படி வந்தவர்களை யெல்லாம் அவரவர்களுக்குரிய துறையிலே மண்ணைக் கவ்வச் செய்து விண்ணை எட்டும் புகழ் பெற்றான் சித்தார்த்தன்.

அம்பெய்யும் கலையிலே அவனுக்கு நிகரில்லை என்று அந்நாளில் புகழ்பெற்றிருந்த தேவதத்தன் சித்தார்த்தன் திறமைக்கு முன்னாலே வெட்கித் தலைகுனிய நேர்ந்தது. அது