பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

38

வலது புறத்திலே சிறிது தொலைவில் ஒரு புதர்ச் செடிக்குப் பின்னாலே சிறு சலசலப்பு ஏற்பட்டது. நந்தன் எழுந்து நின்று செவிசாய்த்துக் கேட்டான்.

அவன் முகம் மலர்ந்தது.

“சித்தார்த்தா, எழுந்திரு. அதோ அந்தப் புதர்க் கூட்டங்களின் பின்னாலே மான் கூட்டம் இருக்கிறது. நான் போய் அதைக் கலைத்து விடுகிறேன். நீ அந்த மான்களைத் தொடர்ந்து சென்று வேட்டையாடு" என்று கூறிவிட்டு அவன் புதர் நிறைந்த பகுதியை நோக்கி வலப் புறமாக ஓடினான். சித்தார்த்தன் வில்லும் அம்புமாக வேட்டையாட ஆயத்தமாக நின்றான்.

நந்தன் கலைத்துவிட்ட மான்களில் ஒன்று சித்தார்த்தன் எதிரில் மிக அருகாகத் துள்ளிப் பாய்ந்து ஓடியது.

அதைக் கண்டவுடன் சித்தார்த்தன் வில்லைத் தோளுக்கு உயர்த்தினான். குறிபார்த்தான். நாணை இழுத்தான்.

அவ்வளவுதான், குறி தவறாது பாயும் அவனுடைய அம்பு ஒரு கணத்தில் அந்த