பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

40

செய்தன? அவற்றை நாம் ஏன் கொல்ல வேண்டும்? ஆனந்தமாகக் காட்டிலே துள்ளி விளையாட வேண்டிய மான்கள் நம்மைக் கண்டு அஞ்சி அரண்டு ஓடுவதைப் பார்த்தாயா? அவற்றின் அச்சத்தைக் கண்ட பின்னும் அவற்றைக் கொல்ல மனம் வருமா?” என்றான் சித்தார்த்தன்.

“சித்தார்த்தா, நாம் இங்கே வேட்டையாடத் தானே வந்தோம்?” என்று கேட்டான் நந்தன்.

“நமக்கு வேட்டை ; ஆனால் ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறு விலங்குகளுக்குச் சாக்காடு! நந்தா, இது நெறியில்லை. வா திரும்பிப் போகலாம்” என்று புறப்பட்டான் சித்தார்த்தன்.

வேட்டைக் காட்டு நிகழ்ச்சியைப் பற்றி சுத்தோதனர் கேள்விப்பட்ட போது, சில நாட்களாக அவர் மறந்திருந்த கவலை மீண்டும் தலையெடுத்தது. சித்தார்த்தனின் அருள் நெஞ்சம் அரசைத் துறந்து ஞானியாகச் செய்து விடுமே என்று அவர் திரும்பவும் கவலைப்பட்டார்.

ஒரு நாள் நாட்டு வளம் காணப் புறப்பட்ட சுத்தோதனர் சித்தார்த்தனையும் தன்