பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

“இளவரசே, இதுதான் நோய், நோயினால் பீடிக்கப்பட்ட எவரும் இதுபோலத்தான் வேதனைப்பட நேரிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது." என்றான் தேர்ப்பாகன்.

இந்தப் பதிலைக் கேட்ட சித்தார்த்தன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். தன்னால் அந்த நோயுற்ற கிழவனுக்கு எதுவும் உதவ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அங்கு நின்று அந்த வேதனைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்று புறப் பட்டுவிட்டான். யாரும் பிணியிலிருந்து தப்ப முடியாதபோது, அரசர்கள் போரிட்டு நாடு சேர்ப்பதும், மக்கள் பாடுபட்டு உழைத்துப் பணம் சேர்ப்பதும் எதற்காக? இவற்றால் என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் சித்தார்த்தன்.

சித்தார்த்தன் மூன்றாவது முறையாகத் தன் தேரின்மீது சென்றபோது, ஒரு வீதியிலே கண்ட காட்சி அவன் சிந்தையைக் கிளறியது. நான்குபேர் சேர்ந்து ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு போனார்கள். பின்னால் கோவென்று அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் கண்ணீர் விட்டுக் கொண்டும் சிலர் சென்-