பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

48

றார்கள். பாடையில் சென்ற பிணம் அசையாமல் கல்போல் கிடந்தது. அதைச் சூழ்ந்து சென்ற ஆண்களும் பெண்களும் அலறி ஒப்பாரி வைத்துக்கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் சென்றார்கள். சித்தார்த்தன் அதற்கு முன் இதுபோன்ற காட்சியைக் கண்டதேயில்லை. அரசர்கள் உலாவருவதையும், தெய்வங்கள் ஊர்வலம் செல்வதையும் தான் பார்த்திருந்தான்.

“சாணா, இது என்ன ஊர்வலம்? அவர்கள் எதைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்?” என்று தன் தேர்ப்பாகனைக் கேட்டான் சித்தார்த்தன்.

“இளவரசே, அது பிணம். பிணத்தைத் தான் பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போகிறார்கள். மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோருமே ஒருநாள் இறக்க வேண்டியது தான். இறந்து பிணமானவனை எரிப்பதற்காகத்தான் இப்போது கொண்டு செல்கிறார்கள். எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்களானாலும், எத்தனை பெரிய மாவீரர்களானாலும் கடைசியில் ஒரு நாள் சாக வேண்டியதுதான். சாவிலிருந்து யாரும் தப்பமுடியாது. மனிதர்கள் ஒவ்வொரு-