பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

சித்தார்த்தனின் மனங்கோண அவனல் நடக்க முடியவில்லை. எப்படியோ கோட்டைக்கு வெளியே தேரைச் செலுத்திக் கொண்டு வந்து விட்டான்.

சித்தார்த்தன் நான்காவது முறையாக வழியில் கண்ட காட்சி முந்திய மூன்று முறைகளில் கண்டவை போன்றதல்ல; முற்றிலும் மாறுபாடானது.

காவியுடை பூண்ட ஒரு மனிதன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக் கொண்டு வீடு வீடாக நுழைந்து பிச்சை வாங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் மற்ற யாரிடமும் காணப்படாத அமைதியும் இன்பமும் நிலவுவதை இளவரசன் சித்தார்த்தன் கண்டான். அவனுக்கு அந்த மனிதனின் தோற்றம் மிகவும் பிடித்திருந்தது.

"சாணு, இந்த மனிதன் யார்? இவன் இவ்வளவு களிப்போடு இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று தேர்ப்பாகனைக் கேட்டான்.

"இளவரசே, இவன் ஒரு துறவி. தனக்கென ஒன்றும் வேண்டாமல் எல்லாப் பொருள்-