பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

அவனுக்குத் துன்பமாக இருந்தது. ஆனால், என்றுமே சித்தார்த்தனின் கட்டளையை மறுத்துப் பழக்கமில்லாத அந்தத் தேர்ப்பாகன், அன்றும் மறுக்க முடியவில்லை. ஆணையை ஏற்றுக் குதிரைகளை ஆயத்தப்படுத்த குதிரைக் கொட்டிலுக்குச் சென்றான்.

இதற்கிடையில் தான் எப்படி வெளியேறுவது என்ற சிந்தனையில் சித்தார்த்தன் மூழ்கினான். தன் தந்தையிடம் போய்த் தன் மனக் கருத்தைக் கூறி விடைபெற்றுக் கொள்வோமா என்று முதலில் அவன் நினைத்தான். ஆனால் அது எளிதான செயலல்ல என்று தோன்றியது. தனக்காக அவர் தனக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்திருந்த கட்டுக் காவல்களைப் பற்றி நினைத்தபோது, அவர் தன்னைப் போகவிடமாட்டார் என்பது உறுதியாகத் தோன்றியது. எனவே அவரிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்படுவது என்று முடிவு செய்தான்.

யசோதரையைப் பற்றி நினைத்தபோதுதான் அவன் மனம் சிறிது சஞ்சலமுற்றது. தன்னிடம் அவள் எவ்வளவு அன்பாக இருந்தாள்? உயிரையே வைத்திருக்கிறாளே! அவளி-