பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

58

டம் சொல்லிக் கொள்ளாமல் போவது எவ்வளவு தவறு என்று நினைத்தான். ஆனால், சொல்லிக் கொண்டு போவதென்றால் அது நடக்கக் கூடியதா? அவள் தன்னைப் போக விடுவாளா? காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது கதறினால் என்ன செய்வது! அவள் துன்பப்பட்டுத் தான் பார்த்ததே யில்லையே! அப்போது அவள் அடையக் கூடிய துன்பத்தைப் பார்த்துக் கொண்டு தன்னால் கல்போல் இருக்க முடியுமா? முடியவே முடியாது. ஆனால், எப்படியும் யசோதரையைவிட்டுப் பிரிந்துதான் ஆக வேண்டும். அவள் ஒருத்தி படும் துன்பத்துக்காகத் தயங்கினால், கோடானு கோடியாக உலகில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்க வழி காண முடியாமலே போய்விடுமே! கடைசி முறையாக அவளைப் பார்த்து, அவளிடம் தன் கருத்தை எடுத்துக்கூறி, அவள் மலர்க் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விடை பெற்றுக்கொண்டு போய்விடலாம் என்று முடிவு செய்து கொண்டான்.

மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, அவள் அறைப்பக்கம் போனான். அவள் அன்று தன் அறைக் கதவைத் தாளிடாமலே படுத்-