பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

62

“சாணா, நான் எங்கே போனேன்? எதற்காகப் போனேன்? என்றெல்லாம் தெரியாமல் அப்பா மனங்கலங்கிப் போயிருப்பார். நீ போய் நான் அரண்மனையை விட்டு வெளியேறிய காரணத்தைக் கூறினால்தான் அவர் ஒருவாறு மனந்தெளியக்கூடும். போ. போய் நான் அரச வாழ்வை துறந்துவிட்டதாகச் சொல். வீண் மனக்கலக்கங்களுக்கு இடம் கொடாதே! என்று வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் தேர்ப்பாகன் அவ்விடத்தைவிட்டு அசைந்தான்.

சாணன் சென்ற பிறகு சித்தார்த்தன் ஆற்றங் கரையிலே தனியாக நின்று கொண்டிருந்தான். ஒரு முறை தன் உடைகளைப் பார்த்துக் கொண்டபோது, தன் புது வாழ்வுக்கு அவை ஏற்றவையல்ல என்ற எண்ணம் பிறந்தது. சிறிது தொலைவில் மரத்தடியில் ஒரு பிச்சைக்காரன் முடங்கிப் படுத்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற சித்தார்த்தன், தன் ஆடைகளைப் பெற்றுக் கொண்டு அவனுடைய ஆடைகளைத் தருமாறு கேட்டுக் கொண்டான்.

அந்தப் பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு தன் கந்தல்களைக் களைந்து கொடுத்தான். அழுக்கடைந்த அந்தக் கந்தல் துணிகளை