பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

வாங்கி அணிந்து கொண்டு சித்தார்த்தன் தன் கால்போன திசையில் நடந்து சென்றான்.

உண்மையைத் தேடிப் புறப்பட்ட அந்த ஒளி மாணிக்கம், பிச்சைக்காரன் உடையுடனும், குன்றாத ஆர்வத்துடனும், உறுதி நிறைந்த உள்ளத்துடனும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையெல்லாம் நடந்து காடும் மேடும் கடந்து கங்கைக் கரைக்குப் போய்ச் சேர்ந்தது. கங்கையைக் கடந்து மகத தேசத்தை அடைந்தது. மகத நாட்டின் தலைநகரான ராஜக்கிருகத்திலே இலையினால் தைத்த ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி வீடு வீடாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது.