பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. இன்பநிலை கண்டறிந்த புத்தபிரான்

மகத நாட்டு மன்னன் பிம்பிசாரன். அவன் ஒருநாள் தன் அரண்மனை உப்பரிகை மேலே நின்று கொண்டிருந்தான். அரண்மனை உப்பரிகைமேல் நின்று பார்த்தால் ராஜக்கிருக நகரின் பல பகுதிகளும் கண்ணுக்குத் தெரியும்.

ஒரு பிச்சைக்காரன் வீடு வீடாகச் சென்று யிச்சை யெடுத்துக் கொண்டிருக்கும் காட்சி மகத மன்னன் கண்களிலே தென்பட்டது.

சில வீதிகளிலே பிச்சை யெடுத்த பிறகு, அந்தப் பிச்சைக்காரன் மேற்கொண்டு பிச்சை யெடுக்காமல் நடந்து சென்றான்.

உப்பரிகை மேலிருந்து பார்க்கும்போதே அந்தப் பிச்சைக்காரனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மன்னனுக்கு ஏற்பட்டது. அந்தப் பிச்சைக்காரனைப் பார்க்கும்போது பரம்பரைப் பிச்சைக்காரனைப்