பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

இன்பநிலை கண்ட புத்தபிரான்

சித்தார்த்தனை யார் என்று கேட்டுக் கொள்ளாமலே பிம்பிசாரன் அவனுக்கு செல்வமும் நிலமும் தருவதாகக் கூறினான். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு நல்வாழ்வு நடத்துமாறு கேட்டுக் கொண்டான்.

பிம்பிசாரன் வேண்டுகோளைக் கேட்ட சித்தார்த்தன், தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூறினான். கபிலவாஸ்து அரசுரிமையைத் துறந்து, உலகுய்யத் தான் உண்மை தேடிப் புறப்பட்ட வரலாற்றைக் கூறினான். உண்மையை யறியாமல், மாளிகை வாழ்வை நாடப் போவதில்லை என்ற தன் நெஞ்சுறுதியைப் புலப்படுத்தினான். அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த மகத மன்னனுக்கு சித்தார்த்தன் மேலிருந்த மதிப்புக் கூடியதே தவிரக் குறையவில்லை. சித்தார்த்தனின் இலட்சிய வேட்கையையும், அந்த இலட்சியத்தில் அவன் கொண்டிருந்த பிடிப்பையும் பிம்பிசாரன் நன்றாகக் கண்டு கொண்டான்.

"ஐயா, தாங்கள் தேடிச்செல்லும் உண்மையைக் கண்டுபிடித்தபின் மீண்டும் தாங்கள் இங்கு வரவேண்டும். அந்த உண்மைவழியில் நானும் தங்களைப் பின்பற்றி நடப்பேன்!” என்று