பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

68

உண்மையான விருப்பத்தோடு பிம்பிசாரன் கூறினான். பிறகு சித்தார்த்தனுக்கு மேலும் தொல்லை கொடுக்கக் கூடாதென்று அவனைத் தனியே விட்டுவிட்டுத் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

சித்தார்த்தன் தங்கியிருந்த இடத்தைச் சிறு கல்மலைகள் சூழ்ந்திருந்தன. அந்தக் கல் மலைகளிலே ஆங்காங்கே குகைகள் இருந்தன. அந்தக் குகைகளிலே சிங்கம் புலிகள் தங்கவில்லை. ஒளி தேடித் தவமியற்றும் முனிபுங்கவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் அந்த மலைக்காட்டின் இடையிலே அவ்வப்போது நடமாடவும் செய்தார்கள். அவர்களைக் கண்ட சித்தார்த்தனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. அவர்களின் மூலமாகத் தான் தேடும் உண்மையை அறியலாமென்று எண்ணினான்.

இவர்களிலே அலார முனிவர் என ஒருவர் இருந்தார். அவருடைய ஞானச் சிறப்பின் புகழ் தவசிகளிடையே அதிகமாகப் பரவியிருந்தது. இந்த அலார முனிவரைத் தொடர்ந்து சென்று பணிவிடைகள் புரிந்து அவருடைய சீடனானான் சித்தார்த்தன். விரைவில் அவன்,