பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

இன்பநிலை கண்ட புத்தபிரான்

தனக்கு ஞான ஒளி தரக்கூடிய தீபம், அலார முனிவரிடம் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். அவர் காட்டும் பாதையிலே தான் தேடும் உண்மையைக் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்டான்.

அலார முனிவரை விட்டுப் பிரிந்து உதக முனிவரைத் தொடர்ந்து சென்றான் சித்தார்த்தன். அங்கும் அவனுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது.

வேறு சில தவசிகள், பட்டினி கிடப்பதாலும் நோன்பியற்றுவதாலும் மன அமைதியைக் காணலாம் என்று கூறினார்கள். எப்படியேனும் உண்மையைக் காண வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தன் அந்த முறைகளையும் செய்து பார்க்க முடிவு செய்தான்.

நோன்பியற்றும் முறைகளையும், பட்டினி கிடந்து தவமிருந்து செய்ய வேண்டிய கிரியைகளையும் கேட்டறிந்துகொண்டு ராஜகிருகத்தை விட்டுப் புறப்பட்டான். பழைய முனிவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து அவன் மிகத் தொலைவு சென்றான்.

கடைசியில் உருவேலங்காடு என்னும் பெரிய வனத்திற்கு வந்து சேர்ந்தான். இருள்

5