பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

74

முகம் ஒளிபெற்றுத் திகழ்ந்தது. அந்த ஒளிக்கு ஈடான ஒளியைப் பகலவனிடத்திலும் பார்க்க முடியாது. உண்மை அறிவினால் பிறந்த அந்த இன்ப ஒளிக்கு ஈடேது? இணையேது?

அமைதியாகிய விடுதலையின்பத்தின் திரு ஒளிதான் அந்தப் பேரொளி. வாழ்வுக்கும் சாவுக்கும் காரணமான அந்தரங்கங்களின் உண்மையை அவன் அறிந்து கொண்டான். உலகை இயக்கி நடத்தும் உண்மையும் ஒழுங்கும் மாறாத நெறிமுறையின் மருமத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

ஒவ்வொரு பொருளையும் அதன தன் ஒழுங்குமுறை மாறாமல் நடத்தி வருகின்ற ஒரு மாபெரும் சக்தி உலகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணமுண்டு. தற்செயலாக எதுவும் நடந்துவிடுவதில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு விளைவு உண்டு. இந்தப் பிறப்பில் நாம் நடத்தும் வாழ்க்கை. நம் முற்பிறப்பின் நேர் பயனே யாகும். இப்பிறப்பில் நாம் பாவம் புரிந்தால் அதன் பலனை அடுத்த பிறப்பில் அடைந்து துயரடைவோம். உலக வாழ்வில் முழு இன்பம் அடைய முடியாது. உள்ளம் முழுவதும் அமைதியடைந்து, உலக