பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

இன்பநிலை கண்ட புத்தபிரான்

வாழ்வைத் துறந்து அடையும் இன்பமே முழு இன்பம். அந்த இன்பமே விடுதலை இன்பம். அந்த விடுதலை இன்பத்தின் பெயரே நிர்வாணம். அமைதி நிறைந்த அந்த முழு இன்பத்தை அடைய நாம் முயற்சி செய்துகொண்டே யிருக்க வேண்டும்.

உண்மை விளக்கம் பெற்ற அறிஞர்களை அக்காலத்தில் மக்கள் புத்தர் என்று அழைத்தார்கள். சித்தார்த்தர் வாழ்வின் உண்மையை அறிந்த காரணத்தினால் புத்தர் ஆனார். அவர் அறிவொளி பெற்ற இடத்திலிருந்த மரம் போதி மரம் என்று அழைக்கப் பெற்றது.

அறிவு விளக்கம் பெற்ற அந்த மரத்தடியைவிட்டுச் செல்ல விருப்பமின்றி அதனடியிலே புத்தர் அமர்ந்திருந்தார். ஏழு நாட்கள் தொடர்ந்து மனத்தை ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து முழுமை இன்பத்தை அடைதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்தார். கடைசியில் முழு இன்பம் பெறும் வழிகள் மூன்று என்ற அவர் கண்டார்.

முதலாவதாக மனிதன் தன் தீய ஆசைகளை அடக்க வேண்டும். எண்ணம், பேச்சு, செயல்