பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

76

ஆகிய எதனாலும் அவன் தீய ஆசைகளை வளர்க்கக் கூடாது. ஆசையை அறுத்தாலன்றி விடுதலை கிடையாது.

இரண்டாவதாக மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு நன்மையே செய்ய வேண்டும். தீயன புரிந்தவர்க்கும் நன்மையே திருப்பிச் செய்ய வேண்டும். நன்மையின் காரணமாகவே நன்மை உண்டாகும்.

மூன்றாவதாக மனிதன் எப்போதும் உண்மையே பேசவேண்டும். உண்மைக்கு அழிவே இல்லை.

மக்கள் எல்லோரும் இந்த நெறிமுறைகளை வாழ்வில் மேற்கொண்டால், துன்பங்களிலிருந்து விடுதலையாகி அமைதி நிறைந்த முழு இன்ப நிலையை அடையலாம். எனவே மக்களுக்குத் தான் கண்ட உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு ஏற்பட்டது.

முன் தன் குருநாதர்களாயிருந்த அலார முனிவருக்கும் உதக முனிவருக்கும் முதலில் இந்த உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்று புத்தர் எண்ணினார். ஆனால் அவர்கள்