பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

இன்பநிலை கண்ட புத்தபிரான்

எத்தனையோ முறைகள் தம் ஆட்களை அனுப்பி மகனைத் திருப்பி அழைத்துக் கொள்ள முயன்றார். முடியவில்லை. தன் மகன் பட்டினி கிடந்து வாடி மெலிந்து போன செய்தி கேட்டு அவர் உள்ளம் உருகித் தவித்தார்.

கடைசியில், புத்தர் வெளியேறிய ஏழாவது ஆண்டில் ராஜகிருகத்தில் அவர் இருக்கும் செய்தி யறிந்தார். தன் மகனை அழைத்து வரும்படி ஆயிரம் ஆட்களுடன் ஒரு செல்வரை அனுப்பினார். சென்றவர்கள் திரும்பி வரவில்லை. இரண்டாம் முறையாக மற்றொரு செல்வரை மேலும் ஆயிரம் ஆட்களுடன் அனுப்பினார். அப்போதும் ஏமாற்றமே. இப்படி ஒன்பது முறை ஆளனுப்பியும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. பத்தாவது முறையாக கலா உதயன் என்பவனை அனுப்பினார். கலா உதயன் மிகவும் நம்பிக்கைக்குரியவன்; புத்தரின் விளையாட்டுத் தோழனாக இருந்தான்.

கலா உதயன் ராஜகிருகத்தை யடைந்த போது, முன் ஒன்பது முறை அனுப்பப் பெற்றவர்கள் அனைவரும் புத்த சங்கத்தில் சேர்ந்து விட்டதை அறிந்தான். புத்த பெருமானைக் கண்ட பிறகு அவனும் தன் ஆட்களுடன் புத்த