பக்கம்:தெய்வ மலர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஆங்காங்கே நின்றவர்களும் விடாதே நரியை பிடி! பிடி! என்று விரட்டிக் கொண்டு ஓடினர்கள். நரியும் தலைதெரிக்க ஓடியது. இனி தப்பிக்க முடியாது என்கிறபோது, குளத்தின் அந்த கரையில் உட்கார்ந்து ஒருவன் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை நரி பார்த்தது, அவனருகில் ஓடியது.

மீன் பிடிப்பவன் நரி இளைப்பு வாங்குவதைக் கண்டு பரிதாபப்பட்டான். "ஐயா! எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நரி கேட்டது. உனக்கு உதவி செய்தால், நீ என்ன உதவி எனக்கு செய்வாய்' என்று திருப்பிக் கேட்டான் அவன்.

‘ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து பத்து மீன் பிடிப்பீர்கள். நானே உங்களுக்குத் தினமும் ஒரு கோழி கொண்டு வந்து தருவேன். அதை விற்று நீங்கள் சீக்கிரம் பணக்காரர் ஆகி விடலாம்!” என்றதும், மீன் பிடிப்பவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உனக்கு என்ன உதவிவேண்டும்’ என்று கேட்டான் அவன்.

என்னை எல்லோரும் விரட்டிக் கொண்டு வருகின்ருர்கள். என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்றது நரி.

  • தோ அந்தப் பள்ளத்தில் படுத்து க்கொள் * என் மீன்கூடையால் உன்னை மூடி விடுகிறேன். அவர்கள் வந்தால் வேறு பக்கம் சாடைக் காட்டி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/10&oldid=580283" இலிருந்து மீள்விக்கப்பட்டது