பக்கம்:தெய்வ மலர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

நரியும் சந்தோஷமாய் கேட்டுக் கொண்டே இன்ைெரு மீனை சாப்பிடத் தொடங்கியது.

மீன் பிடிப்பவனும் தனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்தே விட்டான். சத்தியமும் செய்தான் அவர்களும் நம்பினர்கள், நரி எப்படி தப்பித்துப் போயிருக்கும் என்று புரியாமல் திகைக்கும் போது, ஒரு விக்கல் சத்தம் கேட்டது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீன் பிடிப்பவனும் திரும்பிப் பார்த்தான்.

மூடியிருந்த மீன் கூடை மெதுவாக அசைந்தது. விக்கல் சத்தமும் தொடர்ந்து பெரிதாக வந்து கொண்டே இருந்தது. ராமன் ஓடிப் போய் கூடை யைப் புரட்டிப் பார்த்தான். நரி திருதிருவென்று விழித்தது. மீனின்முள் வாயில் சிக்கிக் கொண்டதால், நரி வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

ஒருவன் வலையை வீசி நரியைப் பிடித்துக் கொண்டான். கோழிக் குஞ்சுகளைத் திருடிய திருடன் நீதானே என்று ஆளுக்கொரு அடி போட்டார்கள். நரி வாயில் நல்ல அடி. இரத்தம் கொட்டியது. அடியை வாங்கிக் கொண்டே நரி அழுதது.

மீன் பிடிப்பவனைப் பார்த்து, என்னை ஒளித்துக் கொள்ளச் செய்துவிட்டு, காட்டியும் கொடுத்து விட்டாயே! நீ துரோகி” என்று கோபமாகப் பேசியது

நரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/12&oldid=580285" இலிருந்து மீள்விக்கப்பட்டது