பக்கம்:தெய்வ மலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

'நீ அதிர்ஷ்டசாலிதான். என்னைக் கண்டால் எல்லோரும் கல்லை எடுத்து அடிக்கிருர்கள். சீ. என்று விரட்டுகின்ருர்கள். பல்லைக் காட்டி பழித்துக் காட்டுகின்ருர்கள். எனக்கு அவமானமாக இருக் கிறது என்று குரங்கு வருத்தப்பட்டுக் கொண்டது.

“மரத்தில் வசிப்பதால் தானே உன்னைக் கேவல மாகப் பேசுகின்ருர்கள். என்னேடு என் வீட்டிற்கே வந்துவிடு' என்று கையைப் பிடித்துக் கூப்பிட்டது. பூனை.

"நான் நாளைக்கு வருகிறேன்' என்று குரங்கு கூறி விட்டு, கிடுகிடு வென்று மரத்தில் ஏறிக் கொண்டு கை அசைத்தது. பூனையும் சந்தோஷமாக வாலே ஆட்டி விட்டு, வீட்டை நோக்கி நடந்தது.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தன் எஜமானியிடம் போனது பூனை மியாவ் என்று செல்லமாகக் கொஞ்சிக் கொண்டு எஜமானியின் காலடியில் உட்கார்ந்தது. எஜமானியும் பூனையின் முதுகில் அன்பாகத் தடவிக் கொடுத்தாள்.

பூனையும் இதுதான் சமயமென்று தன் நண்பனை குரங்கைப் பற்றி பேச்சை எடுத்தது. குரங்கைப் பற்றி புகழ்ந்து பேசியது.

' குரங்கு என்ருல் குறும்புத்தனம் அதிகமாக இருக்குமே! திருடும். சண்டை போடும். பொய் பேசும். ஏமாற்றும். அதனுடன் உனக்கு நட்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/15&oldid=580288" இலிருந்து மீள்விக்கப்பட்டது