பக்கம்:தெய்வ மலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

வேண்டாம் போ’ என்று எஜமானி பூனையை விரட்டிள்ை.

அந்தக் குரங்கு ஒன்றும் அப்படிப்பட்டதல்ல. பொய்யே அதற்குப் பேசத் தெரியாது. சண்டையும் போட வராது. அதைப் பற்றி எனக்கு நன்ருகத் தெரியும்’ என்று பூனையும் சமர்த்தாகப் பேசியது. எஜமானியும் யோசித்தாள்.

பிறகு, பூனையிடம் சரி என்று தன் சம்மதத்தை தெரிவித்து விட்டாள். பூனைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே நண்பனைக் கூப்பிட பூனை ஒட்டமாக ஓடி விட்டது.

குரங்குக்கு அந்த வீட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த வீட்டில் எட்டுக் குடும்பங்கள் இருந்தன. எல்லோரும் ஆசையுடன் குரங்கைப் பார்த்தார்கள். ஆவலுடன் பேசிர்ைகள். குரங்கும் அவர்களுக்கு சலாம் போட்டு வணக்கம் செய்தது.

பூனையும் குரங்கும் இணைபிரியாத நண்பர்களாக அந்த வீட்டில் சுற்றிச் சுற்றி வந்தன. вт896 т ருடைய வீட்டுக்கும் போய் போய் வந்தன. குழந்தை களுடன் விளையாடின. பெரியவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டன. பலகாரங்கள் வாங்கித் தின்றன.

குரங்குக்கு மனதிலே ஒரு வருத்தம் இருந்தது.

மற்றவர்கள் தருகின்ற ருசியான பண்டங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/16&oldid=580289" இலிருந்து மீள்விக்கப்பட்டது