பக்கம்:தெய்வ மலர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ஆரம்பித்தார்கள். பூனையோ, நான் எடுப்பதே இல்லை’ என்று சத்தியம் செய்தது. குரங்கோ எனக்குத் திருட்டுப் பழக்கமே கிடையாது’ என்று தன் தலையிலடித்து சத்தியம் செய்தது.

தனியே விசாரித்த போது, பூனைதான் திருடியது. என்று குரங்கு கூறியது. பூனையோ எங்களுக்குத் தெரியவே தெரியாது என்று கூறியது. .6) وبيك D 6و (أ வீட்டுக்காரர்களுக்கு இந்த இருவர் மேலும் சந்தேகம் இருந்ததால், வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்களை விசாரிக்கப் போகிருேம்’ என்று கூறி விட்டார்கள்.

காலை 6 மணிக்கு விசாரணை. பூனை குரங்கை சமாதானம் செய்தது. தான் எப்படியும் மாட்டிக் கொள்ளப் போகிருேம் என்று குரங்கு தனக்குள்ளே பேசிக் கொண்டு திட்டம் போட்டது. ஞாயிற்றுக் கிழமை காலையில் விசாரணையல்லவா!

ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை நான்கு. மணிக்கு பூனையை குரங்கு எழுப்பியது. விசாரனைக்கு முன் நாம் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வருவோம் என்று பூனையைக்

குரங்கு அழைத்தது. அது மார்கழி மாதம். பனியும் குளிர் காற்றும் அதிகம் அல்லவா!

ஒரு மைல் துாரம் நடந்து பூனையும் குரங்கும் கோயிலுக்குப் போய் விட்டு வந்தன. பூனைக்கோ அதிகக் குளிர். நடுங்கிக் கொண்டு நின்றது. குரங்குக்கு அந்தக் குளிர் ஒன்றும் செய்யவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/18&oldid=580291" இலிருந்து மீள்விக்கப்பட்டது