பக்கம்:தெய்வ மலர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

உடனே பூனை வாலைக் கெளவிக் கொண்டது. வெளியே இழுத்துப் பார்த்தது. வெளியே வராததால் ‘தம் பிடித்துப் பார்த்தது. இந்தப் போராட்டத்தில் எலியின் வால் பூனையின் வாயோடு வந்துவிட்டது.

அதை துப்பிவிட்டு, பூனை பொந்திற்குள் முகம் விடும்போது, நாய் ஒன்று குலைத்துக் கொண்டே அங்கு வந்தது. பூனை பயந்து கொண்டு ஓடிவிட்டது. வாலறுந்த எலி மனம் படக் படக் என்று துடிக்கத் துடிக்கப் பயந்து கொண்டே பொந்தில் இருந்தது.

பூனை போனதும் எலிகள் வந்து பொந்தைச் சுற்றி நின்றுகொண்டன. வாலறுந்த எலிராஜா, மெதுவாக வெளியே வந்தது. உடல் முழுதும் காயங்கள். முனகிக் கொண்டே வந்தது. உடம்பெல்லாம் வலி. வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

"தற்பெருமையாக உங்களிடம் பேசினேன். தந்திரம் தெரிந்ததே ஒழிய, செய்ய முடியவில்லையே! என் தலைக்கணத்திற்கு சரியான தண்டனை' என்று ராஜா எலி சொல்லிக் கொண்டே போனது.

மொட்டை வால் எலி நெளிந்து நெளிந்து போனதைப் பார்த்து, எலிகள் எல்லாம் வேறுபுறம் திரும்பி மெதுவாகச் சிரித்தன. சிரித்துக் கொண்டே இருந்தன.

சொல்வதைப் போலவே நன்ருக செய்பவர்கள் தான் புகழ் பெறுவார்கள். இல்லையேல் அடுத்தவர் கேலிக்கு ஆளாக நேரிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/26&oldid=580299" இலிருந்து மீள்விக்கப்பட்டது