பக்கம்:தெய்வ மலர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வண்டி மாடு

என் பெயர் நந்தி. ஆல்ை, எல்லோரும் என்னை வண்டிமாடு என்றுதான் கூப்பிடுவார்கள். அப்படிக் கூப்பிட்டால்தான் நானும் போவேன். இல்லையென்ருல் பேசாமல் என் இடத்திலே படுத்துக்

கிடப்பேன்.

வண்டிமாடு என்ருல் என்ன பெருமை என்று நீங்கள் கேட்பீர்கள்! என் எஜமான் ஏகாம்பரம் ஒரு வியாபாரி. வாரம் ஒருநாள் வியாபாரத். திற்காக சந்தைக்குப் போவார். அவருடைய வில் வண்டியில் என்னை பூட்டுவார். நானும் ஜல் ஜல் என்று ஓடுவேன். ஊரே என்னையும் வண்டியையும் வேடிக்கை பார்க்கும்.

வண்டி இழுப்பது மட்டுமல்ல; வயல் உழும் வேலையை செய்வேன். கிணற்றில் இருந்து தண்ணிர் இழுக்கும் கவலை ஏற்றத்தையும் நான் இழுப்பேன். வீட்டு வேலைகள் என்ன இருந்தாலும்,

நான்தான் செய்வேன்.

வீட்டில் உள்ளவர்கள் என்னை நன்ருகக் கவனித்துக் கொண்டார்கள். புண்ணுக்கு, பருத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/27&oldid=580300" இலிருந்து மீள்விக்கப்பட்டது