பக்கம்:தெய்வ மலர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பெருமைதான். பஞ்சுபோல வெள்ளைமுடி உடல் முழுவதும் இருக்கும். அவன் முதுகில் தடவில்ை, பட்டுத் துணியைத் தொடுவதுபோல் இருக்கும். கண்களும் திராட்சைப் பழம் போல குண்டாகத் தெரியும். அது குலைப்பதுகூட கேட்க இனிமையாக இருக்கும்.

ஆல்ை, புதிதாகப் பார்ப்பவர்கள், பயந்து போவார்கள். அந்த டாட்டாவுடன் தான் அன்பழகன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டான். நேரம் போனதே தெரியவில்லை.

கடிகாரத்தில் ஒன்பது மணி அடித்ததும், அவசரமாகப் புறப்பட்டான். புத்தகப் பையைத் துரக்கித் தோளில் மாட்டப் போகும் பொழுது, டாட்டா பையைப் பிடித்து இழுத்தது. அதைத் தள்ளி விட்டான். முன்னுல் வந்து நின்றுகொண்டு, அவன் வழியை மறித்தது. அவன் மீண்டும் தள்ளிவிட்டான். அவன் கால்களுக்கு இடையே சுற்றி சுற்றி வந்தது.

அன்பழகனுக்கு கோபம் வந்துவிட்டது. இனிமேல் இப்படி செய்தால் அடிவிழும்” என்று கத்தின்ை. அப்படியும் டாட்டா விடவில்லை. கூடவே ஓடிவந்தது.

வீட்டுக்கு முன்னுல் உள்ள வாசற் கதவை இழுத்து சாத்தின்ை. நான் சாயங்காலம் வரும் வரை வீட்டிலேயே இரு’ என்று சொல்லிவிட்டு, அன்பழகன் ஒடின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/34&oldid=580307" இலிருந்து மீள்விக்கப்பட்டது