பக்கம்:தெய்வ மலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

விளையாட்டு மைதானத்திற்குச்சென்றது. அங்கே மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இங்கேதான் அன்பழகன் இருக்க வேண்டும் என்று, ஒருமூலையில் நின்றபடி உற்று உற்றுப் பார்த்தது. அன்பழகன், டாட்டாவைப் பார்க்காமல், மும்மரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனைக் கூப்பிட்டு, தான் வந்திருப்பதைக் காட்டவேண்டும் என்று விரும்பியது. டாட்டா. உடனே சத்தமாகக் குலைக்கத் தொடங்கியது. நாய் குலைப்பதைக் கேட்டு, மாணவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். வெள்ளைமுடி நாயைப் பார்த்ததும், அவர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள்.

அதில் ஒருவன் டாட்டாவைப் பார்த்தான். இந்த நாய்தாண்டா என்னைக் கடிக்க வந்தது!. என்று கத்திக் கொண்டே கல்லை விட்டு எறிந்தான். அவன் அடிக்க ஆரம்பித்தவுடன், எல்லோரும் ஆளுக்கொரு கல்லை விட்டு எறிந்தார்கள். கல்லடி பட்ட டாட்டா, கத்திக்கொண்டே ஓடியது.

இதன் சத்தத்தைக் கேட்ட மற்ற நாய்களும் ஓடிவந்தன. புது நாயைப் பார்த்ததும், அவைகளும் கடிப்பதற்காக விரட்டிக் கொண்டு வந்தன. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்கு டாட்டா ஓடிவந்தது. பயத்தால் நெஞ்சு திக்திக்’ என்று அடித்துக் கொண்டது.

அன்பழகன் நாயை அடிப்பதைப் பார்த்து விட்டான். ஆசிரியரிடம் அனுமதி கேட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/36&oldid=580309" இலிருந்து மீள்விக்கப்பட்டது