பக்கம்:தெய்வ மலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

திருடிக் கொண்டு போய், எங்கேயோ ஒளித்து வைத்து விட்டாள் என்று எல்லோரும் நம்பினர்கள்.

முதலில் பணிவாக அன்புடன் கேட்பது போல் கேட்டார்கள், கலா! நீ எடுத்திருந்தால் கொண்டு வந்து கொடுத்து வி டுமா! உன் தவறை நாங்கள் பெரிதுபடுத்தாமல் மன்னித்து விடுகிருேம்!” என்று கேட்டார்கள்.

"நான் எடுக்கவே இல்லை’ என்று கல கூறியதை அவர்கள் நம்பவில்லை, அவர்கள் முகம் கடுமையாக மாறியது, குரலும் கோபமாக வந்தது,

"ஒழுங்காகக் கேட்டால் நீ ஒத்துக் கொள்ள மாட்டாய். உதைத்தால்தான் நீ சரிப்பட்டு வருவாய். வேலைக்கார நாய்களே திருட்டு நாய்கள்தான்’ என்று விருந்தாளியாக வந்திருந்த எசமானியின் அண்ணன் தாண்டிக் குதித்து அடிக்க வந்தார்.

வீட்டின் எசமானர் தடுத்து வி ட்டார், கலா மேல் எனக்கு இன்னும் சந்தேகம் வரவில்லே, அவள் வந்து ஆறு மாத காலம் ஆகிறது. இதுவரையில் இப்படி எந்த பொருளும் காணுமற் போனதில்லை, கழட்டி வைத்த தங்க வளையல் காணுமற் போனது

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது' என்று அவர் சாந்த மாகப் பேசினர்,

எப்பொழுதும் படபடவென்று பேசும் எசமானியோ அன்று மிகவும் அமைதியாகவே இருந்தாள், காணுமல் போனது அவளுடைய தங்க வளையல்தானே!

தெய்வ.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/39&oldid=580312" இலிருந்து மீள்விக்கப்பட்டது