பக்கம்:தெய்வ மலர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தன் கணவனைப்போல் சாந்தமாகவும் பேசவர வில்லை. தன்னுடிைய அண்ணன் போல் முரட்டுத்தன மாகக் கோபித்துக் கொள்ளவும் அவளால் முடிய வில்லை,

போலீசில் புகார் கொடுத்தால் போதும். கூட்டிக் கொண்டு போய் நாலு போடு போட்டால், உண்மை யைக் கக்கி விடுவாள்' என்று மீண்டும் விருந்தாளி வேகமாகப் பேசினர்,

சலா குனிந்த தலை நிமிரவில்லை. தன் கெட்ட காலத்தை நினைத்து வருந்தினுள். கண்ணிர் மளமள வென்று அருவியாய் பெருகி, கன்னத்தின் வழியாக வழிந்தது.

'நீலிக்குக் கண்ணிர் நெற்றியிலே’ என்று அப்புறமும் அவர் துள்ளிக் குதித்துக் கத்தினர்.

இனிமேல் கலா இங்கே இருந்தால், அவளை அடித்தாலும் அடித்துவிடுவார். ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் போனலும் போகலாம். ஒரு நிரபராதி தண்டனை அடையக் கூடாது என்பதில் குறியாக இருந்த எசமானர், கலாவை அழைத்தார்.

கலா நான் உன்ளைச் சந்தேகிக்கவே இல்லை. இன்று மாலைக்குள் உன்னுல் முடிந்தால் தங்க வளைய லுட ன் வீட்டிற்குள் வா! இல்லாவிட்டால் வராமல் இருந்துவிடு' என்று அன்போடு, ஆனல் கண்டிப்பான குரலில் போகச் சொல்லி விட்டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/40&oldid=580313" இலிருந்து மீள்விக்கப்பட்டது