பக்கம்:தெய்வ மலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

அப்படி எறிவதற்கும் உதவ முன்வருவதற்கும் நல்ல மனம் வேண்டுமே! என்றது கோழி.

"இப்படித்தான் ஆறு மாதமாக ஒரு வீட்டில் நாயாக கிடந்து உழைக்கிறேன். அதற்கு பிரதி பலகை, என் மேல் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டார் கள் என் எசமானரும் எசமானியும். எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்ருள் கலா!

ஒகோ! அதுதான் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கவலையுடன் உட்கார்ந்திருந்தீர்களா? உங் சுள் கவலையை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங் களேன்' என்று தாய்க்கோழி கேட்டுக் கொண்டது.

திருட்டுப்போன வளையலைப் பற்றி தாய்க்கோழி யிடம் சொல்வதால் என்னபயன் என்று யோசித்தாள்.

அப்பொழுது கோழிக் குஞ்சுகள் அந்தக் குப்பை மேட்டைக் கலைத்து இரை தேடிக் கொண்டிருந்தன். நெல்மணிகளைப் பொறுக்குவதற்காக கால்களால் குப்பையைக் கிளறியபொழுது ஒரு குஞ்சின் கால் களில் ஏதோ சிக்கிக் கொள்ளவும் அது பயந்துபோய் சத்தம்போட, தாய்க் கோழி என்னவென்று பார்ப்ப தற்காக அருகில் ஓடியது .

என்ன ஆச்சிரியம்! அங்கே தங்க வளையல் ஒன்று கிடந்தது.

கலாவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. தாய்க்கோழி தங்க வளையலைக் கொத்திக் கொண்டு வந்து அவள் காலடியில் வைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/43&oldid=580316" இலிருந்து மீள்விக்கப்பட்டது