பக்கம்:தெய்வ மலர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இந்தத் திருட்டுக் காக்கை வீட்டிற்குள் புகுந்து எதையாவது தின் பதற்காக திருடிக் கொண்டு வந்து இந்த மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டுதான் தின்னும். இன்று எதையோ எடுத்துக் கொண்டு வந்து மரத்தில் உட்கார்ந்த பொழுது நானும் பார்த் தேன். சூரிய வெளிச்சத்தில் மின்னியது. அது தங்க வளையல் என்று இம்பொழுதுதானே தெரிகிறது! என்றது கோழி.

எப்படியோ என் மீது வந்த திருட்டுக் குற்றம் போய்விட்டது. இப்பொழுதே ஓடிப்போய் எசமானி யிடம் தரப்போகிறேன் என்ருள் கலா!

“சீக்கிரம் போங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்

சாகலாம். திருட்டுப் பட்டம் சுமந்து கொண்டு ஒரு 量 நிமிஷம் கூட வாழக் கூடாது' என்றது கோழி. உழைத்துச் சாப்பிடுவதில் உள்ள சுகம், ஏமாற்றி வாழ்வதில் இல்லை என்றதும் கலா சந்தோஷத்துடன் ஒடிஞ)ள்.

தன் குஞ்சின் உயிரைக் காத்த கலாவுக்குத் தன்ல்ை உதவி செய்ய முடிந்ததே! இந்த வாய்ப்பைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி என்று கூறி. கோழி மகிழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/44&oldid=580317" இலிருந்து மீள்விக்கப்பட்டது