பக்கம்:தெய்வ மலர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விருந்து சாப்பாடு

நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தார். அந்த நாய் சாப்பிடுவதைத்தான், நாராயணன் ஆவலுடன் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அந்த நாய்க்கு அவர்தான் சோறு போடுவார். ஒவ்வொரு வேளையும் அவர்தான் அதன் அருகில் இருந்து சோறு போட்டு, அது சாப்பிட்டு முடிக்கும் வரை பார்த்துக் கொண்டேயிருப்பார். தானே ஆதை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வார்.

வேலை காரணமாக வெளியே போனுல் கூடி. வீட்டுக்கு வந்ததும், உடனே ஓடிவந்து நாயைத்தான் பார்ப்பார். நன்ருகச் சாப்பிட்டதா, துங்கியதா என்று தன் மனைவியை கேட்பார். அதற்குப் பிறகுதான் தன் மகன் மனுேகரனைப் போய் உடில் நலம் விசாரிப்பார்.

இப்படி அந்த நாய்க்கு விருந்தும் உபசரிப்பும் இருந்தது. புதிதாக வாங்கி வந்த ஆல்சேஷன்நாயா? அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த விலை உயர்ந்த நாயா? அப்படி ஒன்றும் தெரியவில்லையே ஆந்த நாயைப் பார்த்தால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/45&oldid=580318" இலிருந்து மீள்விக்கப்பட்டது