பக்கம்:தெய்வ மலர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அதைப் பார்த்தால் ஒரு தெரு நாய் மாதிரி அல்லவா தெரிகிறது! ஆமாம்! அது தெரு நாய்தான்! அந்த தெருநாயைத்தன் நாராயணன் வீட்டுக்குக் கொண்டு வந்து. வாசலில் கட்டிப்போட்டு, காவல் வைத்து, அறுசுவை உணவு வைத்து, அருமை பெருமையாகக் காப்பாற்றி வருகிருர்.

இத்தனைக்கும் காரணம் இருக்கத் தான் இருந்தது. அந்த நாய், நாராயணன் மகன் மைேகானைக் காலில் கடித்துவிட்டது. கடைவீதிக்கு காய்கறிகள் வாங்கப்போன அந்தப் பையனை, இந்தத் தெருநாய் திடீரென்று ஓடிவந்து கடித்து விட்டது.

பதறிப்போர்ைகள் மனேகரனின் பெற்றேர்கள். கஷ்டப்பட்டு ஓடி, அந்த நாயைப் பிடித்து விட்டார் நாராயணன். அந்தத் தெருநசய் ஒருவேளை வெறி நாயாக இருந்தால் என்ன செய்வது?

அந்தப்பயத்தில் தான் நாயைக் கொண்டுவந்து வீட்டில் கட்டிப்போட்டு விட்டார். இருபத்தியொரு நாட்கள் கண்விழித்து ஊழியம் புரிந்தார். மகனுக்கும் இடுப்பைச் சுற்றி ஊசிகள் போட்டு வைத்தார். மகனும் பிழைத்துக்கொண்டான். நாயும் சாகவில்லை.

கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, நாயை ஒரு அடி போட்டு விரட்டி அடித்தார். அதன் பிறகு பெருமூச்சு விட்டார். ஆமாம்! அது அவரது நிம்மதிப் பெருமூச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/46&oldid=580319" இலிருந்து மீள்விக்கப்பட்டது