பக்கம்:தெய்வ மலர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

அந்த நாயோ ஆனந்தப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தார்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல வெயில் நேரம். எங்கேயாவது நிழலில் படுத்து நிம்மதியாகத் துரங்க வேண்டும் என்றுதான் அந்தத் தெருநாய் வேகமாக ஓடியது.

வேப்ப மரமொன்று விரிந்து பரந்து நின்றது. அதன் கீழே போய் படுத்து உறங்கிவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று திட்டம் போடவேண்டும் என்று முடிவு செய்தது.

இந்தத் தெரு நாய்க்கு என்ன திட்டம் இருக்கிறது! ஆமாம் அதற்கும் திட்டம் இருக்கிறதே! அது போட்ட திட்டப்படி தானே, இத்தனை நாளும்

அதற்கு விருந்து நடந்து வந்தது நாராயணன் வீட்டில்.

அந்தத் தெருநாய் அதற்கு முன்பாக ஒரு வீட்டு நாயாகத்தான் இருந்தது. அதன் எஜமானர் வடிவேலன் அதைப் பிரியமாகத்தான் வளர்த்து வந்தார். போட்ட சாதத்திற்கு மேல் போதாது என் ருே என்னவோ, அது ஆள் இல்லாத நேசம் பார்த்து. சமையற்கட்டில் புகுந்து, திருடித் தின்னத் தொடங்கியது.

பொறுத்துப் பார்த்தார் வடிவேலன் ஒரு நாள் அதை அடியோ அடி என்று அடித்து, வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். தெரு நாயாகிவிட்ட பிறகு அலைந்து பாரித்த அந்த நாய், ஒருநாள் திட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/47&oldid=580320" இலிருந்து மீள்விக்கப்பட்டது