பக்கம்:தெய்வ மலர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

போட்டது. தீர்மானம் எடுத்துக் கொண்டது. தைரிய

மாகவும் நடந்து கொண்டது.

அதாவது, வசதியான வீட்டுப்பையணுக ஒருவனைப் பார்த்து மெதுவாகக் கடித்து வைப்பது. தன்னை வெறிநாய் என்று பயந்து அந்த வீட்டிலுள்ளவர்கள் கட்டிப்போட்டு. உணவு கொடுப்பார்கள். நன்ருகச் சாப்பிடலாம் என்பதுதான் நாயின் திட்டம்.

முதலில் ஒரு வீட்டின் முன்னுல் ஒரு பையனைக் கடித்து விட்டது. அந்த வீட்டில் அந்த நாய்க்கு அபர்க்கனமான விருந்து சப்பாடு. மெலிந்த நாயின் உடல் கொஞ்சம்கொஞ்சமாகத் தேறத் தொடங்கியது.

அடுத்த முறையாகத்தான் நாராயணன் மகன் மனுேகரனைக் கடித்தது. கறியும் சோறும் தினம் தினம் சப்டே சாப் பிட , நாயின் உடல் மெருகேறியது. மினுமினுப்பும் கொண்டது.

அடுத்து என்ன செய்யலாம் என்றுதான் வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தெருநாயான பிறகு அதற்கு புதிய நட்பு ஒன்து கிடைத்திருந்தது. அந்தக் கறுப்பு நாயும் ஆங்கே எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தது.

கறுப்புநாயிடம் தன் உடம்பைக் காட்டியது. தனது அழகைப் புகழ்ந்து கூறியது. வாயைப் பிளந்து காட்டி, சாப்பிட்ட சோற்று வகையின் பட்டியலை விவரித்தது. இப்படியே தன் எதிர்காலம் முழுவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/48&oldid=580321" இலிருந்து மீள்விக்கப்பட்டது