பக்கம்:தெய்வ மலர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சிறுவர்களுக்குக் கதை எழுதுவதை, சிரமமான காரியம் கான்பார்கள்.

சொல்ல வந்ததை சுருக்கமாக மட்டுமல்ல தெளிவாகக் கூற வேண்டும், அதையும் குழந்தைகள் மனம் ஏற்றுக் கொன்கின்ற வகையில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் இதில் உண்டு.

எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு இந்த நூலில் உள்ள கதைகளை மிகவும் கவனத்துடன் எழுதியிருக்கிறேன்.

இது சிறுவர்களுக்காக எழுதப்பட்ட ஆருவது கதைப் புத்தகமாகும்.

எல்லா நூல்களும் பள்ளிகளில் துணைப்பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. எனது நூல்களின் அருமையை உணர்ந்து ஆதரித்து வரும் தலைமை ஆசிரிய, ஆசிரியை களுக்கும், பள்ளித் தாளாளர்களுக்கும் எனது மனப்பூர்வ மான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் விரும்பும் கதாபாத்திரங்களை மனதில் கொண்டு, எழுதப்பட்ட இக் கதைப் புத்தகத்தை பெற்ருேர்களும் குழந்தைகளும் பெரிதும் விரும்பி ஏற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த நூலே உங்கள் கையில் அளிக்கிறேன்.

ஞானமலர் இல்லம் எஸ், நவராஜ் செல்லேயா

சென்னை-17 | 1 *-9-8i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/5&oldid=580280" இலிருந்து மீள்விக்கப்பட்டது