பக்கம்:தெய்வ மலர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள் புரியும். அவற்றின் நடையில் ஒரு மாறுதல் தெரியும். ஆமாம்! அவற்றின் நடை ராஜா நடை போல் தெரியுமே!

எல்லா மிருகத்துக்கும், தான் தான் ராஜாவாகப் போகிருேம் என்கிற நினைப்பு எ ஃது, ஆசையைத் துரண்டி விட்டு விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் யார் ராஜாவாக ஆகப் போகிருர் என்பது தெரிந்து போய் விடும்!

அப்படி என்ன அவசரம் வந்து விட்டது என்று காரணம் சொன்னல் தானே உங்களுக்கும் புரியும். அந்தக் காட்டிற்கு ஒரு ராஜா வேண்டும். அதுவும் உடனடியாக வேண்டும் என்று காட்டு மிருகங்கள் முடிவு கட்டி விட்டன.

காட்டிலுள்ள மிருகங்கள் எல்லாம் அந்த ஆலமரத்தடியில் கூடிவிட்டன. ஒரு நரி மேடையில் ஏறி, எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கூட்டத் தைத் தொடங்கி வைத்தது.

தோழர்களே! நமது சிங்க ராஜாவுக்கு வயதாகி விட்டது. அதாவது கிழமாகிப் போய் விட்டது. தனக்கு இரைதேடக்கூட முடியாமல், குகையிலே ஒரு மூலையிலே படுத்துக் கிடக்கும் சிங்கத்தை நம்பி, நாம் இனிமேல் வாழ முடியாது. அதனல், நம்மைக் காப்பாற்றும் சக்தியுள்ள ஒருவரை இப்பொழுது ராஜாவாகத் தேர்ந்தெடுக்கவே, இங்கு நாம் கூடியிருக்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/53&oldid=580326" இலிருந்து மீள்விக்கப்பட்டது