பக்கம்:தெய்வ மலர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

மேடையில் நின்ருலே ராஜாவாகி விடலாம் என்ற நம்பிக்கையுடன் எல்லாம் ஏறிக்கொண்டின.

வலிமையுள்ள மிருகங்கள் சிறு சிறு மிருகத்தைக் கீழே தூக்கி எறிந்தன. கொஞ்சம் வலுவுள்ள மிருகங்கள் ஒன்றையொன்று பிடித்துத் தள்ளிக் கொண்டன. புலி உறுமியது. கழுதை கத்தியது. யானை பிளறியது. நரி ஊளையிட்டது. இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பறவைகளும் சந்தோஷத்தால் சத்தம் போட்டுச் சிரித்தன. மிருகங்களின் கூச்சல் ஒருபுறம், பறவைகளின் சிரிப்பு மற்ருெருபுறம். இப்படியாக காடே பேய்க் கூச்சலால் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

'அமைதி அமைதி" என்று கரடி கத்திப் பார்த்தது. இனிமேல் சத்தம் போட்டால், உங்களை அடித்துக் கொன்று விடுவேன்' என்று புலி உறுமிப் பார்த்தது. தும்பிக்கையால் துக்கி எறிந்து காலில் போட்டு மிதிப்பேன்’ என்று யான எச்சரித்துப் பார்த்தது.

ஒட்டகம் தலையால் மோதி மோதி எல்லா மிருகங் களையும் உட்கார வைக்க முயன்றது. இப்படியாக பலப்பல மிருகங்கள் பலப்பல வழிகளில் முயன்றன.

அடக்க அடக்க சத்தம் அதிகமாகியது. கூச்சல் மிகுதியாகியது. குழப்பம் நிறைந்து காணப்பட்டது.

ஒன்றுக்கொன்று இப்பொழுது கோபத்தால்

தெய்வ...4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/55&oldid=580328" இலிருந்து மீள்விக்கப்பட்டது