பக்கம்:தெய்வ மலர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

ஆரம்பத்திலே அதட்டி மி ட்டி வைத்திருந்தால், இப்படி இந்த சிறு குஞ்சு பேசாதே! நாம் அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விட்டோம். இனி என்ன செய்ய முடியும்? அமைதியாகத் தான் திருத்த வேண்டுமே ஒழிய, ஆத்திரப்பட்டு எதுவும் செய்து விடக் கூடாது என்று தாய்க் கோழி முடிவு செய்து கொண்டது. வேறு வழி இல்லையே!

அன்றும் அப்படித் தான் மஞ்சள் குஞ்சு, தனி யாகப் போய் வேலி ஓரத்தில் குப்பையைச் கிளறிக் கொண்டிருந்தது. தாய்க் கோழியோ தன் மற்ற குஞ்சுகளுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு சத்தம். கூக்குரல். மஞ்சள் குஞ்சு தான் அப்படிக் கத்தியது. தாய்க் கோழி நிமிர்ந்து பார்த்தது. ஒரு கருடனின் கால்களுக் கிடையிலே மஞ்சள் குஞ்சு சிக்கிக் கொண்டிருந்தது.

பாய்ந்து பறந்த வேகத்தில், கோழிக்குஞ்சைப் பிடித்த கருடன், ஆதை அறியாமலேயே பக்கத்தில் இருந்த வேலியின் மீது மோதிக் கொண்டது. அதளுல்

அடிபட்டு விட்டது.

இதன் காரணமாக, திடீரென மேல் நோக்கிச் கருடல்ை எழுந்து பறக்க முடியவில்லை. கோழிக் குஞ்சின் பிடியையும் விட்டு விடாமல் சற்று மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/61&oldid=580334" இலிருந்து மீள்விக்கப்பட்டது