பக்கம்:தெய்வ மலர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எருமையும் பெருமையும்!

லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த சாலையில் வேறு எந்த வாகனமும் வாவில்லை என்ற தைரியத்தில் அந்த டிரைவர் லாரியை வேகமாக ஒட்டிக் கொண்டிருந்தான்.

என்ன ஆச்சரியம் ! ஒரு எருமை மாடு. திடீரென்று குறுக்கே நட து வந்தது. அது அந்த சாலையைக் கடக்கும் என்று நினைத்தான் டிரைவர். ஆனல், அது நடு ரோட்டில் படுத்து க் கொண்டது.

மிகவும் சிரமப்பட்டு, லாரியை நிறுத் தி கிட்டான் டிரைவர் கீழே இறங்கி வந்தான். அறிவு கெட்ட எருமை மாடு" என்று ஆத்திரத்தோடு கத்தின்ை. *சூ என்று விரட்ட கை ஒங்கின்ை’

எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் எருமை மாடு அவனை ஏற இறங்கப் பார்த்தது. ஏதோ அவனை ஒரு அற்பப்பிராணியைப் பார்ப்பது போல ஏளனமாக எருமை மாடு பார்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/65&oldid=580338" இலிருந்து மீள்விக்கப்பட்டது